அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவை பொற்காலமாக மாற்றுவோம் - விஷால் உறுதி!

 

பரபரப்பாக நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 100 வாக்குகளுக்கு மேற்பட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார் விஷால். இதர பதவிகளுக்கும் விஷால் அணியைச் சேர்ந்தவர்களே வென்றனர்.

விஷால்

இதை அடுத்து விஷால் பேசுகையில், "தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைவரும் நன்றி.  எங்கள் வெற்றியின் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில், தமிழ் சினிமாவை பொற்காலமாக மாற்றுவோம்.

தயாரிப்பாளர் சங்கள் வரலாறு காணாத முன்னேற்றத்தை அடையும். நாங்கள் அதற்கான முயற்சிகளை எடுப்போம். மாற்றம் வர வேண்டும் என்றால் அதனை யாராலும் தடுக்க முடியாது. தனிப்பட்ட ஒரு மனிதனுக்காக, பழி வாங்கும் நடவடிக்கைகாக இந்த வெற்றி கிடைக்கவில்லை. தயாரிப்பாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண விரும்பி இந்த வெற்றியை எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.  பதவியேற்றதும் விவசாயிகள், தயாரிப்பாளர்களுக்காக இரண்டு அறிவிப்புகளை வெளியிட உள்ளோம்." என்றார். 

அப்போது திருட்டி விசிடி தொடர்பாக விஷாலிடம் கேள்வி எழுப்பட்டது.  அதற்கு அவர், "திருட்டு விசிடி விவகாரத்தில் பதவிக்கு வருவதற்கு முன்பாக சில நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறேன். தற்போது தயாரிப்பாளர் தலைவர் பதவிக்கும் வந்துள்ளேன். நீயா, நானா பார்த்துவிடுவோம்." என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!