சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் ஆஜர்! | Maran brothers appeared before Chennai CBI court in telephone exchange case

வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (03/04/2017)

கடைசி தொடர்பு:12:02 (03/04/2017)

சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் ஆஜர்!

சட்ட விரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பக வழக்கில், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் இன்று ஆஜரானார்கள். 

Maran brothers

கடந்த 2004 - 07 காலகட்டத்தில், தயாநிதி மாறன், மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பதவியில் இருந்தபோது, பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. கோபாலபுரம் மற்றும் போட் கிளப் சாலையில் உள்ள மாறன் வீடுகளுக்கு, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான அதிவேக உயர் இணைப்புகள்கொண்ட டெலிபோன் எக்சேஞ்ச் நடத்தியதாகவும், இந்த இணைப்புகளை சன் டிவி-க்குப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், அரசுக்கு 1.78 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் வழக்கு தொடரப்பட்டது. பின்னர், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், சன் டிவி ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது டெல்லி சிபிஐ போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கில், மாறன் சகோதரர்கள், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள். அவர்களுக்கு இன்று, குற்றப்பத்திரிகை வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை மே 22-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க