வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (03/04/2017)

கடைசி தொடர்பு:09:23 (04/04/2017)

கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை!

tnau

கோவை, வேளாண் பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக, இன்று பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளது, பல்கலைக்கழக நிர்வாகம். விடுதி மாணவர்களை வெளியேறுமாறும் உத்தரவிட்டுள்ளது. 

tnau protest

விவசாயிகளுக்கு ஆதரவாகவும்  ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகவும், கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறகணித்துவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில், போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவந்ததால், பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தது. நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை தேர்வுகள் தொடங்க உள்ளதால், அவர்கள் மட்டுமே நாளை பல்கலைகழக வளாகத்தில் அனுமதிக்கப்படுவர் என்றும், மற்ற மாணவர்கள் நாளை காலைக்குள் பல்கலைக்கழக விடுதிகளைக் காலிசெய்திட வேண்டும் என்றும் நிர்வாகம் கூறியுள்ளது.

- தி.விஜய்

நீங்க எப்படி பீல் பண்றீங்க