வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (04/04/2017)

கடைசி தொடர்பு:12:47 (04/04/2017)

தேர்தல் ஆணையரே இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலா? நெருக்கடியில் தமிழக அரசு!!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், இதுவரை மாநிலத் தேர்தல் ஆணையரை தமிழக அரசு நியமிக்காதது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

TN Election commissioner
 

தமிழகத்தின் மாநிலத் தேர்தல் ஆணையராக சீதாராமன் பதவி வகித்துவந்தார். அவரின் இரண்டாண்டு பதவிக்காலம் முடிந்த பின்னர், கடந்த 22.03.2017-ம் தேதி தமிழக அரசிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். அவர் வகித்த பதவி காலியாகியுள்ளது. 

'தமிழக மாநிலத் தேர்தல் ஆணையம், மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் நடத்த அவகாசம் கோரி, மாநிலத் தேர்தல் கமிஷனின் தனிச்செயலர் ராஜசேகர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். அந்த மனுவில், “வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடையவில்லை. எனவே, மே 14-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த இயலாது. தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்”  என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம், மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தது.

இந்த நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையர் பணியிடம் காலியாக உள்ளதால், தேர்தல் ஆணையத்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக தேர்தல் ஆணையரை நியமிக்கும் கட்டாயத்தில் தமிழக அரசு இருப்பதால், சீதாராமனே மீண்டும் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க