வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (04/04/2017)

கடைசி தொடர்பு:14:39 (04/04/2017)

டெல்லியில் தலைகீழாக நின்று போராடும் விவசாயிகள்!

டெல்லி ஜந்தர் மந்தரில், 22-வது நாளாகப் போராடிவரும் தமிழக விவசாயிகள்,  இன்று தலைகீழாக  நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TN farmers delhi protest
 

காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகளின் பயிற்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து,  வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அந்த சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இந்தக் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது.

TN farmers protest delhi
 

மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக் கயிறு உள்ளிட்டவற்றைவைத்து போராட்டம் நடத்திய விவசாயிகள்,  வாயில் எலிக் கறி, பாம்புக் கறியை வைத்தும் போராட்டம் நடத்தினர். 22 - வது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்துக்குக் கிடைத்த பலனாக, விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

TN farmers delhi protest
 

இந்த நிலையில், தமிழக விவசாயிகள் இன்று காலை, தலைகீழாக நின்று போராட்டம் நடத்தினர். ஆம் ஆத்மி கட்சியினரும் இன்று போராட்டத்தில் கலந்துகொண்டு, தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்துவருகின்றனர். 
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க