ஆர்.கே.நகர்த் தொகுதி மக்களுக்கு, தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும், தேர்தல் விதிமீறல்கள் குறித்தும் மக்கள் புகார் அளிக்க ஏதுவாக, மொபைல் எண்ணைத் தெரிவித்தார் மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகேயன், "இணையத்தில், தேர்தல் குறித்து தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவர்களைக்  கண்டுபிடிக்க, மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல்கள் இருக்குமானால், அதை  9445477205 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் வாயிலாக மக்கள் தெரிவிக்கலாம். குற்றச்சாட்டின் வீரியத்தைப் பொறுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. 10 மத்தியக் கம்பெனி படைகளில், இதுவரை எட்டு கம்பெனி படைகள் வந்திருக்கின்றன. இதுவரை, 7 லட்சம் ரூபாய் பிடிபட்டுள்ளது. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக, இதுவரை 370 புகார்கள் வந்துள்ளன. 65 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இரவிலும் வாகனச் சோதனை கடுமையாக நடந்துவருகிறது" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!