வெளியிடப்பட்ட நேரம்: 13:21 (04/04/2017)

கடைசி தொடர்பு:13:45 (04/04/2017)

நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மீது அமெரிக்க இன்ஜினீயர் பகீர் புகார்!

அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஜே.கே.ரித்தீஷ் உள்பட, ஏழு பேர் மீது மோசடி வழக்கு பதிவுசெய்துள்ளது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

Actor Ritheesh
 

சென்னையைச் சேர்ந்த ஆதி நாராயணன் என்ற சிவா, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த நடிகரும், முன்னாள் எம்பி.யுமான ரித்தீஷ் உள்பட ஏழு பேர் சேர்ந்து,  தன்னிடம் இருந்து இரண்டு கோடியே 18 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில், முதல் குற்றவாளியாக ரித்தீஷ், இரண்டாவது குற்றவாளியாக அவருடைய மனைவி ஜோதீஸ்வரி உள்பட, ஏழு பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "புகார்தாரர் ஆதிநாராயணன், அமெரிக்காவில் இன்ஜினீயராகப் பணியாற்றுகிறார். அவரிடம் நடிகர் ரித்தீஷ், அவருடைய மனைவி ஜோதீஸ்வரி உள்பட ஏழு பேர், கடந்த 2014-ம் ஆண்டு, 2 கோடியே 18 லட்ச ரூபாயை வாங்கி, ஏமாற்றியுள்ளனர். பலமுறை கேட்டும் பணத்தைக் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக, அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றார்.

ரித்தீஷ் தரப்பில் பேசியவர்கள், "பணத்தை ஏற்கெனவே கொடுத்துவிட்டோம். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வழக்கை சட்டப்படி சந்திப்போம்" என்றனர். 

-எஸ்.மகேஷ்