வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (04/04/2017)

கடைசி தொடர்பு:14:43 (04/04/2017)

அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய 50 அடி நீளம் கொண்ட திமிங்கலம்!

புதுச்சேரியை அடுத்த கடற்கரை கிராமமான புதுக்குப்பத்தில் நேற்று இரவு திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கிராம பஞ்சாயத்து அளித்த தகவலின்பேரில் வனத்துறை அதிகாரிகள், திமிங்கலம் ஒதுங்கிய இடத்தை பார்வையிட வந்தனர். பின்னர், அவர்கள் கிராம மக்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'பல நாள்களுக்கு முன்பே இந்தத் திமிங்கலம் இறந்துள்ளது. இதனால், மீன்களுக்கு இறையான பின்னரே எஞ்சிய எலும்புப் பகுதி மட்டும் கரை ஒதுங்கியுள்ளது. இந்தத் திமிங்கலம் சுமார் 50 அடி நீளமும் கிட்டத்தட்ட 10 டன் எடை கொண்டதாகவும் இருந்திருக்கும்' என்று தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க