வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (04/04/2017)

கடைசி தொடர்பு:18:39 (04/04/2017)

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்காவிட்டால்... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்காவிட்டால் அபராதம் விதிக்கும் மத்திய அரசின் மோட்டார் வாகன விதிமுறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Madras High court
 

மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டத்தின் ஒருசில விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது சிரமம் என்று வாகனப்பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டத்தில் இரண்டு முக்கிய விதிமுறைகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவால், உரிய காலத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வாகனம் விற்க ஆட்சேபனையில்லாச் சான்று தாமதமாவதற்கான அபராதமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை