வெளியிடப்பட்ட நேரம்: 01:29 (05/04/2017)

கடைசி தொடர்பு:08:03 (05/04/2017)

முதல் வகுப்பில் வைகோ!

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தேசத்துரோக வழக்கில் கைதாகி, 3-ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  15 நாட்கள் காவலில் வைக்க எழும்பூர் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார்.  சிறையில், முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டது.  ஒரு மின்விசிறி, கட்டில், தலையணை, போர்வை, நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன. அவர் படிப்பதற்காக, தினமும் ஒரு ஆங்கில மற்றும் ஒரு தமிழ்ப் பத்திரிகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முதல் நாள், 4-ம் தேதி காலை வைகோ எழுந்தவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். பின்னர், அவருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. மதியம் சாம்பார், கூட்டு மற்றும் மோருடன் சாதம் வழங்கப்பட்டது. இரவு எண்ணெய் கலக்காத இரண்டு சப்பாத்திகள் வழங்கப்பட்டன. காலையும் மாலையும் தேநீர் தரப்பட்டது. 'வைகோ விரும்பினால், சிறை நூலகத்துக்குச் சென்று புத்தகங்கள் படிக்கலாம்' என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க