வெளியிடப்பட்ட நேரம்: 08:06 (05/04/2017)

கடைசி தொடர்பு:10:00 (05/04/2017)

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார்

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றார். அவருக்கு தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார்.

 

Indira Banerjee

 

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல், பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு அடைந்ததையடுத்து, பொறுப்புத் தலைமை நீதிபதியாக, ஹூலுவாடி ஜி.ரமேஷ் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மார்ச் 31-ம் தேதி, இந்திரா பானர்ஜி சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டார். இந்திரா பானர்ஜி, 1985 ம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். சுமார் 17 ஆண்டுகள் கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். அதன்பின்னர் 2002-ம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியானார். 2016-ம் ஆண்டிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக செயல்பட்டு வந்தார். தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

படம் : கே.ஜெரோம்