வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (05/04/2017)

கடைசி தொடர்பு:13:49 (05/04/2017)

ஜெ.மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வாதிட்ட ஆச்சார்யாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவுக்கு சம்பளமாக, ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் தெரியவந்துள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில்... ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

 சொத்துக்குவிப்பு வழக்கின் செலவுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிய விண்ணப்பித்தார், சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி. கர்நாடக நீதித்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள தகவலில், சொத்துக்குவிப்பு வழக்கிற்காக 2.78 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவுக்கு சம்பளமாக, ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.