புழல் சிறையில், தண்ணீர்கூட குடிக்காமல் வைகோ மெளன விரதம்!

தனது தந்தையின் நினைவு நாளையொட்டி, தண்ணீர்கூட குடிக்காமல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மெளன விரதம் கடைபிடிக்கிறார், தேசத்துரோக வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

Vaiko silent fasting
 

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பேசியதாக, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கு தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை, எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் வைகோ. இதையடுத்து, அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  வைகோ இன்று, காலை முதல் மெளன விரதம் கடைபிடித்துவருகிறார். வைகோ-வின் தந்தை வையாபுரி, 1973-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி மறைந்தார். கடந்த 44 வருடங்களாக வைகோ தனது தந்தையின் நினைவு நாளில் மௌன விரதம் கடைபிடித்து வருவது வழக்கம். இன்று, தன் தந்தையின் நினைவு தினம் என்பதால், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தண்ணீர் கூட குடிக்காமல் மெளன விரதம் கடைபிடித்துவருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!