வெளியிடப்பட்ட நேரம்: 12:09 (05/04/2017)

கடைசி தொடர்பு:16:50 (05/04/2017)

காசா கிராண்ட் கட்டுமான உரிமையாளரிடம் போலீஸ் விசாரணை


நில மோசடிப் புகாரில் சென்னையைச் சேர்ந்த காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அனிருந்தனிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அனிருந்தன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் 200 பேர் புகார் அளித்தனர். அந்தப் புகாரில், சென்னை திருவான்மியூர் உள்ளிட்ட பிரதானப் பகுதிகளில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, 3 கோடி ரூபாய் வரை மோசடிசெய்துள்ளார். அவரிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் புகாரின் அடிப்படையில், காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அனிருந்தனிடம், காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.