வெளியிடப்பட்ட நேரம்: 17:09 (05/04/2017)

கடைசி தொடர்பு:17:09 (05/04/2017)

இன்ஸ்பெக்டர் கையெழுத்தைப் போட்ட எஸ்ஐ சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் டிரைவிங் ஸ்கூல் தரகருடன் சேர்ந்து காவல் ஆய்வாளரின் கையெழுத்தைப் போட்ட எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, தனியார் ட்ரைவிங் ஸ்கூல் தரகர் ஒருவர் துணைக் காவல் ஆய்வாளர் சங்கரை தொடர்புகொண்டுள்ளார். உடனே, துணைக் காவல் ஆய்வாளர் சங்கர், தன்னுடைய உயர் அதிகாரியான காவல் ஆய்வாளர் கையெழுத்தைத் தானே போட்டுள்ளார்.

மேலும், அவருடைய ரப்பர் ஸ்டாம்ப் சீலையும் பயன்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தெரிய வந்தவுடன் காவல் ஆய்வாளர், மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னிஸிடம் புகார் அளித்துள்ளார். அதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட எஸ்ஐ சங்கரை இடைநீக்கம்செய்து உத்தரவிட்டார். மேலும், மோசடியில் ஈடுபட்ட டிரைவிங் ஸ்கூல் தரகரைக் கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.