வெளியிடப்பட்ட நேரம்: 05:52 (06/04/2017)

கடைசி தொடர்பு:08:19 (06/04/2017)

நமக்கு மரியாதை இல்லையே ஏன்? காரணம் சொல்கிறார், திருநாவுக்கரசர்!

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.  அவர் பேசுகையில், ''டெல்லியில் 23 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களை மோடி பார்க்கவில்லை. தமிழக விவசாயிகளை அவமானப்படுத்துகிறார். அதன்மூலம் தமிழ்நாட்டையே அவமானப்படுத்துகிறார். எனவே, டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் அழைத்துப் பேச வேண்டும். மத்திய அரசாங்கம், தமிழக விவசாயிகளுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். தமிழக அரசாங்கம், இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். அவர்களின் அனைத்து கடன்களையும் தள்ளுபடிசெய்ய வேண்டும். 

தமிழக அரசாங்கத்தில் யார் முதலமைச்சர், யாருக்கு  அதிகாரம் இருக்கிறது என்றே தெரியவில்லை. தமிழக அரசாங்கம், மத்திய பி.ஜே.பி அரசாங்கத்துக்குப் பயப்படுகிறது. காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மாதிரி செல்வாக்கு உள்ள தலைவர்கள் முதலமைச்சராக இல்லாத காரணத்தினால்தான், பலவீனமான அரசாங்கமாக மத்திய அரசு பார்க்கிறது. அதனால்தான் நம்முடைய கோரிக்கைகளுக்கு மரியாதை இல்லை. ஆர்.கே.நகரில் பணப்புழக்கம் அதிகளவில் சுழல்கிறது. தேர்தலுக்குத் தேர்ந்தல் இந்த நிலை மோசமாகிக்கொண்டு செல்கிறது.'' என்று பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க