சிறை விதிகளை மீறிய சசிகலா பார்வையாளர்கள்: அம்பலப்படுத்தியது ஆர்.டி.ஐ

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவைக் காண வருவோரின் என்ணிக்கை சிறை விதிகளை மீறியதாக உள்ளது என தகவல் உரிமைச் சட்டம் மூலம் வெளிப்பட்டுள்ளது.

சசி

 

பெங்களூரு சிறையிலுள்ள சசிகலாவைக் காண பார்வையாளர்கள் பலரும் வந்தவண்ணம் உள்ளனர். இதில் அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள், டி.டி.வி.தினகரன், வழக்கறிஞர்கள் எனப் பலரும் வந்து செல்கின்றனர். ஆனால் சிறை விதிப்படி ஒரு மாதத்துக்கு இரண்டு பார்வையாளர்கள் மட்டுமே தண்டனைக் கைதிகளை பார்க்க அனுமதிக்கப்படுவர்.

நரசிம்ம மூர்த்தி என்னும் பொது நல ஆர்வலர் தகவல் உரிமைச் சட்டம் மூலம் சிறையில் இருக்கும் சசிகலாவைக் காண வருவோரின் விவரப் பட்டியலைக் கோரியுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அவருக்குக் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில், சசிகலாவை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 19 பேர் 14 முறை காண வந்துள்ளனர். இது சிறை விதிகளை மீறிய செயல் என குற்றம் சாட்டியுள்ளார் இந்தப் பொது நல ஆர்வலர்.

இவருக்கு பதிலளித்துள்ள சிறை நிர்வாகிகள், சிறைத்துறை அதிகாரியின் தனிப்பட்ட ஒப்புதலுடன் இவ்வாறு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!