வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (06/04/2017)

கடைசி தொடர்பு:13:03 (06/04/2017)

இரட்டை இலை விவகாரம்! தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி.தினகரன் அடடே... விளக்கம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க-வின் பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தைப் பயன்படுத்துவதாக பன்னீர்செல்வம் அணியினரின் புகாருக்கு, தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

TTV Dinakaran

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், வரும் 12-ம் தேதி நடக்க உள்ளது. இதில், அ.தி.மு.க. அம்மா சார்பில் டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா சார்பில் மதுசூதனன் போட்டியிடுகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பன்னீர்செல்வம் அணியினர், இரட்டை இலைச் சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக, தினகரன் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதற்கு, பன்னீர்செல்வம் அணி தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்தது. மேலும், தினகரன் அணியினர், கட்சிப் பெயரை தவறாகப் பயன்படுத்துவதாகவும், குறிப்பாக சமூக வலைதளங்களில் இரட்டை இலைச் சின்னத்தையும் அ.தி.மு.க. கட்சிப் பெயரையும் பயன்படுத்தி வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் புகார் தெரிவித்தனர். 

 இதுதொடர்பாக விளக்கமளிக்க, தினகரனுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், 'இரட்டை இலைச் சின்னம், அ.தி.மு.க பெயரைத் தவறாகப் பயன்படுத்தவில்லை. அ.தி.மு.க பெயரில் உள்ள ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்கை நான் இயக்கவில்லை' எனத் தேர்தல் ஆணையத்திடம் தினகரன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்தனர்.