மதுசூதனனை ஆதரித்து ஆர்.கே.நகர் களத்தில் இறங்கும் ஜி.கே.வாசன்!

o.panneer selvam

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவுக் கோரி, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வாசனுடன், ஞானதேசிகனும் உடன் இருந்தார். ஓ.பன்னீர் செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, செம்மலை, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் ஜி.கே.வாசனை சந்தித்தனர்.

பின்னர், வாசன் - ஓ.பி.எஸ் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜி.கே.வாசன், 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீது த.மா.கா.வுக்கு நம்பிக்கை இல்லை. ஓ.பி.எஸ் நடத்தும் தர்மயுத்தத்தில் த.மா.கா உறுதியாக ஒருங்கிணைந்து செயல்படும். ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தரும். நாளை மறுநாள் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து ஆர்.கே.நகரில் பிரசாரம் மேற்கொள்வேன். இன்று முதல் த.மா.கா தொண்டர்கள், மதுசூதனனுக்கு ஆதரவாக ஆர்.கே.நகர் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வார்கள்', எனவும் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!