அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிய சரத்குமார், டி.டி.வி.தினகரனுக்கு திடீர் ஆதரவு

அ.தி.மு.க அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளார். 

sarath kumar
 

அ.தி.மு.க கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கூட்டணியில் இருந்து விலகியது. தனித்து போட்டியிடுவதாக கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்தார். அதன்படி ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அந்தோணி சேவியர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆர்.கே.நகரில் ச.ம.க போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ச.ம.க தலைவர் சரத்குமார், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை சரத்குமார் நிர்வாகிகளுடன் சென்று டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளார்.  அவரை ஆதரித்து பிரசாரம் செய்யவும் இருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!