தேர்தலைத் தள்ளிவைப்பதால் பயனில்லை - சொல்கிறார் சீமான்

வாக்காளர்களுக்குப் பணம், ரெய்டு, அடிதடி, தேர்தலை தள்ளிவைக்கச்சொல்லி புகார் என, இடைத்தேர்தல் நடக்கும் சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம், நிமிடத்துக்கு நிமிடம் செய்தியில் இடம்பெற்றுவருகிறது. 

இந்த நிலையில், அங்கே போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க, தண்டையார்பேட்டை பகுதிக்கு வந்திருந்தார் சீமான். அவரிடம், இடைத்தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் அதிகமாகிவருவது பற்றிக் கேட்கப்பட்டது. 

அதற்குப் பதில் அளித்த சீமான், ''சில கட்சிகள் கோரிக்கைவைக்கின்றன. தள்ளிவைத்தால் மட்டும் பயன் கிடைத்துவிடுமா? மீண்டும் தேர்தல் நடக்கும்போது, பணம் கொடுத்து வாக்காளர்களை வாங்கப்பார்ப்பார்கள். இதே புகாரினால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலைத் தள்ளிவைத்து மீண்டும் நடத்தியபோது, பணப்பட்டுவாடா நடந்தது. இந்த விஷயத்தில், தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். முக்கிய சாலைகளில் மட்டும் வாகனச் சோதனை, ரோந்துப் பணியை நடத்தாமல், தெருவுக்குத் தெரு சோதனை நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் கைது செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று கொதிப்புடன் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!