தமிழக விவசாயிகள், ரத்தத்தால் மோடி உருவத்தின் கால்களைக் கழுவி போராட்டம்!

டெல்லியில் போராடிவரும் விவசாயிகள், இன்று பிரதமர் மோடியின் கால்களை ரத்தத்தைக்கொண்டு கழுவும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு வகைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விவசாயிகள், இன்று மோடியின் முகமூடி அணிந்தவரின் கால்களைக் கழுவும் போராட்டத்தை நடத்துகின்றனர். 25-வது நாளாக இவர்கள் போராட்டம் தொடர்கிறது.

modi

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராடிவருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்கள் போராடிவருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான போராட்டங்களை அவர் முன்னெடுத்துவருகின்றனர். 25 வது நாளாக இன்று போராடும் அவர்கள், மோடியின் முகமூடி அணிந்தவரின் கால்களை ரத்தத்தால் கழுவும் போராட்டத்தை நடத்திவருகின்றனர். 

கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக்கொள்ளுதல், எலிக்கறி உண்பது, பாம்புக்கறியுடன் இருப்பது, தலை கீழாக நிற்பது என விதவிதமான போராட்டங்களால் அவர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்று மோடியின் கால்களை ரத்தம்கொண்டு கழுவும் நூதனப் போராட்டத்தில், கைகளைக் கிழித்துக்கொண்டு, ரத்தம் வடிய அவர்கள் போராட்டத்தில் இறங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு, 'எழுத்துபூர்வமாக உறுதியளிக்கப்பட்டால்தான் போராட்டம் கைவிடப்படும்' என்று விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பஞ்சாப், உத்தரப்பிரதேச விவசாயிகளும் தமிழக விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்துவருகின்றனர். நடிகர் மற்றும் இயக்குனர் டி.ராஜேந்தர் நேரில் சென்று தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு அளித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!