வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (07/04/2017)

கடைசி தொடர்பு:13:54 (07/04/2017)

உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு திடீர் பதவி உயர்வு!

உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Nirajna Mardi

இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஐஏஎஸ் அதிகாரிகள் நிரஞ்சன் மார்டி, டேவிதார், ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர், கூடுதல் தலைமைச் செயலாளர் பதவிக்கு உயர்த்தப்படுகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.


இதில், நிரஞ்சன் மார்டி தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளராக உள்ளார். அவருக்கு அண்மையில்தான் அந்தப் பதவி வழங்கப்பட்டது. அதேபோல டேவிதார், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளார். ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சியின் முதன்மைச் செயலாளராக உள்ளார். இந்த உத்தரவு தற்காலிகமானது என்றும் கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார்.