Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருமான வரித்துறை சோதனையை கிண்டல்செய்த சரத்குமார்!

என் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. வருமான வரித்துறையினர் எடுத்துச்செல்ல இங்கு எதுவும் இல்லை. அவர்கள் எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நலம்' என்று கிண்டலாகக் கூறினார், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். 

Sarath Kumar


இந்த வருமான வரித்துறை சோதனையில், விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டில் 2.2 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. மேலும், சேப்பாக்கம் எம்எல்ஏ-க்கள் விடுதியில் உள்ள விஜயபாஸ்கரின் அறையில் இருந்து 1.80 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, சரத்குமார் வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள், வீட்டின் முன் குவிந்துள்ளனர்.

இதுகுறித்து, சரத்குமார் கொட்டிவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். அவர்களுக்கு நான், முழு ஒத்துழைப்பு அளித்துவருகிறேன். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொள்கின்றனர் என்று தெரியவில்லை. ஆர்.கே.நகரில் இன்று முதல் நான் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். எனவே,  எனது பிரசாரப் பயணத்தைத் தடுக்கத் திட்டமிட்டே, வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக நான் நினைக்கிறேன். என் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அவர்கள் எடுத்துச்செல்ல இங்கு எதுவும் இல்லை. அவர்கள் எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நலம்" என்றார்.


இந்தநிலையில், சரத்குமார் வீட்டுக்கு  அமைச்சர்  கடம்பூர் ராஜூ மற்றும் தளவாய் சுந்தரம் வருகைதந்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close