வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி - முதல்வர் உத்தரவு

வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்க உத்தரவிட்டு இருக்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

 

எடப்பாடி பழனிச்சாமி

விழுப்புரம் மாவட்டம், துருவை கிராமத்தில் வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ,செவல்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவரும், கங்கரக்கோட்டை பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 8 பேரும் உயிரிழந்தனர். அதே பகுதியில் உள்ள மற்றொரு பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 2 பேரும், விருதுநகர் மாவட்டம், வெற்றிலையூரணி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேரும் இறந்தனர்.
மேலும், விருதுநகர் மாவட்டம் கீழத்திருத்தங்கல் புதுவை நகர் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 5 பேர் பலியாகினர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அறிக்கையில் சொல்லி இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!