தீ விபத்தில் இருந்து தப்பினார் கமல்ஹாசன்

KamalHaasan

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில், நேற்று நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதையடுத்து ஊழியர்களின் உதவியுடன் அவர் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் ட்வீட் செய்ய, ரசிகர்கள் அவரை நலம் விசாரித்தனர். 

 

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளேன். மூன்றாவது மாடியில் இருந்து இறங்கியுள்ளேன். இப்போது நலமாக உள்ளேன். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உதவிய ஊழியர்களுக்கும், அக்கறையுடன் விசாரித்தவர்களின் அன்புக்கும் நன்றி' எனக்கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!