பள்ளம் விழுவது இது முதல் முறையல்ல அமைச்சரே!!

மெட்ரோ ரயில் பணி காரணமாகதான் அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார், இவ்வாறு பள்ளம் விழுவது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்துள்ளார். 

Jayakumar, annasalai
 

சென்னை அண்ணாசாலை ஆயிரம்விளக்கு பகுதியில், சர்ச் பார்க் பேருந்து நிலையம் அருகே,  திடீரென்று சாலையில்  பள்ளம் விழுந்தது. பள்ளத்தில் பேருந்தும், காரும் சிக்கிக் கொண்டது. 

Jayakumar
 

பள்ளம் விழுந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட  நிதியமைச்சர் ஜெயக்குமார், 'இவ்வாறு சாலையில் பள்ளம் விழுவது இதுதான் முதல் முறை. கடந்த சில ஆண்டுகளாக  மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக பள்ளம் தோண்டப்பட்டு மீண்டும் மூடும்போது கலவை விகிதங்கள் மாறுபட்டிருக்கலாம். எனவே, தற்போது ஈரப்பதம் அதிகரிப்பால் மண் இலகி, பள்ளம் விழுந்திருக்கலாம். மீண்டும் சாலை விபத்துகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்', என்றார். 

அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சைக் கேட்ட செய்தியாளர்கள் தெளிவான விளக்கம் கேட்டு கூச்சல் எழுப்பினர். மேலும், இவ்வாறு சென்னையில் பள்ளம் ஏற்படுவது முதல் முறை  என்று கூறுவது தவறு என்றும் அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்பியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!