’மானமுள்ள அரசு என்றால் ராஜினாமா செய்யவும்’ : துரைமுருகன் தாக்கு | DMK Durai Murugan slams ADMK ministers, asks them to resign

வெளியிடப்பட்ட நேரம்: 08:39 (10/04/2017)

கடைசி தொடர்பு:10:56 (10/04/2017)

’மானமுள்ள அரசு என்றால் ராஜினாமா செய்யவும்’ : துரைமுருகன் தாக்கு

’மானமுள்ள அரசு என்றால், ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அ.தி.மு.க-வை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். 

Durai murugan
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுவதாகத் தேர்தல் ஆணையம் நேற்றிரவு அறிவித்தது. இதற்கான அறிவிப்பை, தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டது. அதில், 'தற்போது தேர்தல் நியாயமாக நடைபெறும் சூழல் இல்லை. எனவே, தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும்' என்று கூறப்பட்டிருந்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டதுகுறித்து தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்துக்கு  தேசிய அளவில் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆளுங்கட்சியே காரணம். மானமுள்ள அரசு என்றால், ராஜினாமா செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க