Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரித்துறை அலுவலகத்தில் அடுத்தடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆஜர்!

Vijayabaskar

சென்னை வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர்.

Vijayabaskar

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ம் தேதி அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் மற்றும் அவரின் உறவினர்கள் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டன. சரத்குமார் வீட்டில் இருந்தும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

sarath kumar

இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர், வரும் 10-ம் தேதி (இன்று) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர், இன்று காலை அடுத்தடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்கள். அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர்களிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

படங்கள்: கே.ஜெரோம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement