வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (10/04/2017)

கடைசி தொடர்பு:17:24 (10/04/2017)

நந்தினி கொலை வழக்கை ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி விசாரிக்கத் தடை!

அரியலூரில் சிறுமி நந்தினி கொலை வழக்கில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ariyalur Nandhini

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூரில், கடந்த ஜனவரி 14-ம் தேதி இளம்பெண் நந்தினி, நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் உள்பட மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

நந்தினி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரின் தாயார் ராஜகிளி, இன்று மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயங்கொண்டம் டிஎஸ்பி விசாரணைக்குத் தடை விதித்து, வரும் 24-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க