4 மணி நேர விசாரணையில் நடந்தது என்ன? அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கடந்த 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீரெனச் சோதனை மேற்கொண்டனர். 20 மணி நேரத்துக்கு மேல் நடந்த சோதனை, அடுத்த நாள் அதிகாலையில்தான் முடிவடைந்தது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து, வரும் 10-ம் தேதி (இன்று) விளக்கம் அளிக்க விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

அதன்படி, விஜயபாஸ்கர் தன் வழக்கறிஞர் ஐயப்பமணியுடன் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்தார். இதையடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கரிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கிருந்து புறப்பட்டார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'வருமானவரித் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன் . அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன்' என்று கூறியுள்ளார்.

மேலும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமாரிடமும் வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணை முடிந்து அங்கிருந்து அவர் புறப்பட்டார்.

படம்: ஜெரோம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!