மதுரையில் ’எய்ம்ஸ்’?- பதில் கேட்கும் உயர்நீதிமன்றம்! | AIIMS inmadurai?- Madurai high court questions the State and the centre

வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (11/04/2017)

கடைசி தொடர்பு:16:49 (11/04/2017)

மதுரையில் ’எய்ம்ஸ்’?- பதில் கேட்கும் உயர்நீதிமன்றம்!

மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என தொடரப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் எனக் கோரிய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதன்மூலம் தென் தமிழகத்து மக்களுக்கு குறைந்த செலவில் சிறப்பான சிகிச்சைகள் கிடைக்கும். மேலும், தென் தமிழகம் மட்டுமல்லாது, கேரளாவிலிருந்தும் மக்கள் மதுரைக்கு வர வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், ஆதிநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, மத்திய அரசு குறைந்த  செலவில் நிறைவான சிகிச்சைகளை அளிக்கும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளை, மக்கள் நலன் கருதி பல மாநிலங்களிலும் அமைப்பதற்கான முயற்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.