வெளியிடப்பட்ட நேரம்: 22:14 (11/04/2017)

கடைசி தொடர்பு:22:14 (11/04/2017)

காவல்துறை ஆணையாளர்கள் பணி இட மாற்றம்!

காவல்துறை உதவி ஆணையாளர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்யும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இதன்படி, திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளர் அழகேசன் சென்னை மாநகர உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அம்பத்தூர் உதவி ஆணையாளர் ஏ.பி.செல்வம் தி.நகர் பகுதிக்கும், தி.நகர் உதவி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் அம்பத்தூர் பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மத்திய குற்றவியல் பிரிவின் உதவி ஆணையாளர் வின்சென்ட் ஜெயராஜ், அசோக் நகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோட்டூர்புரம் உதவி ஆணையாளர் ஆல்பிரெட் வில்சன், பூந்தமல்லி பகுதிக்கும், பூந்தமல்லி உதவி ஆணையாளர் முத்தழகு, எழும்பூர் பகுதிக்கும் பணி இட மற்றம் செய்யப்பட்டுள்ளனர். எழும்பூர் உதவி ஆணையாளர் sc /st விஜிலென்ஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மத்திய குற்றவியல் பிரிவின் இணை ஆணையாளர் ரவிச்சந்திரன், ராஜபாளையம் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அசோக் நகர் உதவி ஆய்வாளர் ஹரிகுமார் வனிகவரித்துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.சென்னை புலனாய்வு பிரிவில் பணி புரிந்து வந்த ராஜகாளியப்பன் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவிற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அலுவல்ரீதியான பணி இட மாற்றம்தான் செய்யப்பட்டுள்ளது என டிஜிபி ராஜேந்திரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.