வெளியிடப்பட்ட நேரம்: 22:57 (12/04/2017)

கடைசி தொடர்பு:00:29 (13/04/2017)

சென்னை ஐ.ஐ.டியில் தீ விபத்து!

சர்தார் பட்டேல் சாலையில் உள்ள சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (சென்னை ஐ.ஐ.டி), ஐ.சி.எஸ்.ஆர் அலுவலகக் கட்டடத்தில் சற்று நேரம் முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அலுவலகத்தின் மேல்தளம் முழுவதும் தீப்பற்றி எரிவதாகத் தகவல் வெளியானது.

5 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தற்போதைய நிலவரப்படி, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீயை முழுவதுமாக அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் ஆபத்து இல்லை என ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.