Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டுகிறது தி.மு.க!

விவசாயிகளின் பிரச்னைகள்குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தி.மு.க ஏற்பாடுசெய்துள்ளதாக, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

M.K.Stalin
 

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மற்றும் மாநில அ.தி.மு.க அரசு நிறைவேற்றிட, கூட்டத்தில் வலியுறுத்த உள்ளனர்.  இந்தக் கூட்டத்துக்கான அழைப்பு, ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் அனுப்பப்பட உள்ளதாக, மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில், கடந்த ஒரு மாத காலமாக தமிழக விவசாயிகள் போராடிவருகின்றனர். காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்கள் முன்பு, டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவளித்த ஸ்டாலின், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு, விவசாயிகளின் பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் என்று வாக்களித்தார். அதன்படி, தற்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்துள்ளார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement