விஜயபாஸ்கர் ராஜினாமாவா? டி.டி.வி.தினகரன் பதில் | T.T.V.Dinakaran reveals about Vijaya Bhaskar resignment

வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (13/04/2017)

கடைசி தொடர்பு:14:43 (13/04/2017)

விஜயபாஸ்கர் ராஜினாமாவா? டி.டி.வி.தினகரன் பதில்

அமைச்சர் பதவியை விஜயபாஸ்கர் ராஜினாமா செய்வாரா என்ற கேள்விக்கு, டி.டி.வி.தினகரன் பதில் அளித்துள்ளார்.

T.T.V.Dinakaran
 

டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆர்.கே.நகரில் போட்டியிடும் பிற கட்சியினர்  வலியுறுத்திவந்தனர். தினகரன் மீது அந்நியச் செலாவணி  மோசடி வழக்கு இருப்பதால், அவர், தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் எனக் குற்றம் சாட்டப்பட்டது.  இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், இது குறித்து தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்குப் பதிலளித்த தினகரன், ’என்னைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு அவர்கள் யார்? என் மீதான வழக்குகளை நான் நீதிமன்றத்தில் சந்தித்துக்கொள்வேன். ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க அம்மா கட்சி சார்பில் நான்தான் போட்டியிடுவேன்; வெற்றிபெறுவேன்’ என்றார்.

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்று, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது பற்றியும் தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தினகரன், ’மு.க.ஸ்டாலின் ஜோசியம் சொல்ல எப்போது ஆரம்பித்தார்’ என்று கிண்டலடித்துப் பேசினார். விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதுகுறித்துப் பேசிய தினகரன், ’விஜயபாஸ்கர்  இந்தச் சூழலை சட்டரீதியாகச் சந்திப்பார். அவர் ராஜினாமா செய்யவில்லை. அந்தத் தகவல் வதந்திதான்’ என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க