Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு 65 நாள் லீவு... ஏன்?

கூடங்குளம் அணுமின் நிலையம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இரு அணு உலைகளிலும், வணிக ரீதியிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கூடங்குளத்தின் 2-வது அணு உலையில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு கடந்த 11-ம் தேதி செயல்படத் தொடங்கியது. அந்த அணு உலையில் தற்போது முழு அளவான 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதல் அணு உலையில் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்கியது. இந்த அணு உலையில் இருந்து இதுவரை 14,126 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. அணு உலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு எரிபொருள் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் எரிபொருள் மாற்ற வேண்டியது இருப்பதால் கூடங்குளம், முதலாவது அணு உலையின் செயல்பாடு இன்று அதிகாலை 5.53 மணிக்கு நிறுத்தப்பட்டது.

கூடங்குளம்

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ’’கூடங்குளம் முதலாவது அணு உலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆக்ஸைடு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலமாகவே மின்சாரம் உற்பத்தி நடக்கிறது. அணு உலையில் உள்ள எரிபொருளானது 7,000 மணி நேரம் செயல்பட்ட நிலையில், அதனை மற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதற்காக இன்று அணு உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இந்தச் சமயத்தில், அணு உலையை குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் குளிர்விப்பான்களையும் சோதனை செய்ய வேண்டியது அவசியம். அதனால், அதன் வால்வுகள் திறக்கப்பட்டு சோதனை செய்யப்படும். அந்த நேரத்தில், ஒலி எழும்பும். இந்த ஒலியானது மெதுவாக அதிகரித்துக் கொண்டே செல்லும். பகல் நேரத்தில் மட்டுமே இந்த வால்வு சோதனை நடத்தப்படும். இது அவசியமான சோதனை என்பதால் சுற்றுப்புற மக்கள், இந்தச் சத்தம் குறித்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை. அணு உலையில் உள்ள பயன்படுத்தப்பட்ட எரிபொருளை எடுத்து விட்டு அதற்குப் பதிலாக புதிய எரிபொருள் நிரப்பப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக நடத்தப்படும். இந்தப் பணியில் எந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். இதற்காக அணு உலை நிறுத்தப்பட்டு இருப்பதால், இந்த நேரத்தில் அணு உலையின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து சோதனைகளும் நடத்தி முடிக்கப்படும். எரிபொருள் நிரப்பும் பணிகள் முடிவடைய 65 நாட்கள் ஆகக்கூடும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னரே முதலாவது அணு உலை மீண்டும் செயல்படத் தொடங்கும்” எனத் தெரிவித்தனர்.

-ஆண்டனிராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement