Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்ளாட்சித் தேர்தல்! உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் புதிய மனு

மே மாதம் 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையம், ஜூலை மாத இறுதிவரை கால அவகாசம் கேட்டுள்ளது.

மே 14-ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஜூலை 31-ம் தேதி வரை கால அவகாசம் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாது என்றும் ஜூலை மாதம் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement