வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (13/04/2017)

கடைசி தொடர்பு:16:03 (13/04/2017)

மூன்றாவது முறையாக வருமான வரித்துறை அலுவலகத்தில் சரத்குமார் ஆஜர்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வருமான வரித்துறை அலுவலகத்தில் மூன்றாவது முறையாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் ஆஜராகியுள்ளார். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக அவர் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 7-ம் தேதி சரத்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல, அடுத்த நாளே அவரது மனைவி ராதிகாவுக்குச் சொந்தமான ரேடன் நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையை அடுத்து, இருவருக்கும் வருமானவரித்துறை நேரில் வருமாறு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், இன்று 3-வது முறையாக சரத்குமார் நேரில் ஆஜராகியுள்ளார். 

4.97 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததை சரத்குமார் ஒப்புக்கொண்டதாக தகவல் கூறுகின்றது. மேலும், வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவர் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.