ராமநாதபுரம்: என்கவுன்டரில் ரவுடி சுட்டுக்கொலை

ராமநாதபுரம் தொண்டியைச் சேர்ந்தவர் ரவுடி கோவிந்தன். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவர் நேற்று இரவு தங்கச் சங்கிலியை பறித்து ஓடினார். அப்போது, அவரை போலீஸார் மடக்கிப் பிடித்த போது, அவர்களை கோவிந்தன் அரிவாள் மூலம் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Encounter

இதையடுத்து, அவரை போலீஸார் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். இந்த என்கவுன்டரில் இரண்டு போலீஸார்கள் காயமடைந்துள்ளனர். உதவி ஆய்வாளர் தங்க முனியசாமி, தலைமைக் காவலர்  சவுந்திர பாண்டியன் ஆகியோர் திருவாடனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!