வெளியிடப்பட்ட நேரம்: 03:13 (14/04/2017)

கடைசி தொடர்பு:03:13 (14/04/2017)

மெட்ரோ ரயில் பணி: வண்ணாரப்பேட்டையில் திடீர் நில அதிர்வு

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து மற்றும் கார் விழுந்தன. இதையடுத்து, அதே பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன் சாலையில் விரிசல் ஏற்பட்டது.

Washermanpet Earthquake


மெட்ரோ பணிகள் துவங்கிய பிறகு, சென்னை அண்ணா சாலையில் இது வரை இரண்டு முறையும், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஒரு முறையும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நள்ளிரவு வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது, அருகே உள்ள ஒரு வீட்டில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் பதறியடித்து வெளியே வந்தனர்.

Washermanpet Earthquake

 

Washermanpet Earthquake

அதேபோல், மின்ட் பாரத் தியேட்டர் அருகே சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.