அம்பேத்கர் சிலைக்கு ஸ்டாலின், விஜயகாந்த் மரியாதை

அம்பேத்கரின் 127 -வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றினர் பல்வேறு கட்சி தலைவர்கள். சென்னையில் ஸ்டாலின், விஜயகாந்த் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

சட்டமேதை அம்பேத்கரின் 127 -வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாதிய முரண்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தவர் அம்பேத்கர். இவரின் பிறந்த நாளையொட்டி தேசம் முழுதும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தும், அவருக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் இன்று கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். "ஒரு சமுதாயம் முன்னேறி இருக்கிறதா என்பதை பெண்களின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே அளவிடுவேன்" என்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பொன்மொழிகள் இன்றைக்கும் பெண்ணுரிமையின் மைல்கல் என குறிப்பிட்டுள்ளார் அவர்.

மேலும், தேமுதிக சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மற்ற கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!