Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

11 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்-முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கடலில் மூழ்கி உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம்துறை, கேசவன்புத்தன்துறை மற்றும் கோவளம் ஆகிய கடலோர மீனவ கிராமங்களைச் சேர்ந்த வாஸ்தியன் என்பவரின் மகன் ஜோசப் சுகந்தன், ஜேசு என்கின்ற மைக்கேல் என்பவரின் மகன் ஜார்ஜ் அந்தோணி மற்றும் பியூஸ் என்பவரின் மகன் அருள் நெவில் ஆகிய மூன்று மீனவர்களும் சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேரும் கடலில் மூழ்கினர். இதில், ஜோசப் சுகந்தன் மற்றும் ஜார்ஜ் அந்தோணி ஆகிய இரண்டு மீனவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அருள்  நெவில் என்பவரின் உடல் கண்டெடுக்கபடவில்லை என்ற செய்தியையும்;

தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி சின்னையர் என்பவரின் மகன் பிரான்சிஸ், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கட்டுமரம் கவிழ்ந்ததில், கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;  தூத்துக்குடி வட்டம், திரேஸ்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மகன் ரோசன் என்பவர், கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; கடலூர் மாவட்டம், ரெட்டியார்பேட்டை சின்னபிள்ளை என்பவரின் மகன் ராமமூர்த்தி என்பவர், மீன்பிடிக்கச் சென்றபோது, கடல் அலை மற்றும் காற்றின் வேகத்தினால் படகு கவிழ்ந்து, கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; சிதம்பரம் வட்டம், புதுகுப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவரின் மகன் பாவாடைசாமி என்பவர் கடல் அலை மற்றும் காற்றின் வேகத்தினால் படகு கவிழ்ந்து, கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடிதளத்திலிருந்து விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற கஜேந்திரன் என்பவரின் மகன் பாக்கியராஜ் மற்றும் திரு.முருகேஷ் என்பவரின் மகன் விக்னேஷ் ஆகிய இருவரும் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; காஞ்சிபுரம் மாவட்டம், கடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுரங்கன் என்பவரின் மகன் வேலு என்பவர், மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது, படகு கவிழ்ந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்; திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூரைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் ரத்தினம் என்பவர் மீன்பிடிக்கச் சென்றபோது, கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த நாகூர்பிச்சை என்பவரின் மகன் பெத்தபெருமாள் என்பவர் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 11 மீனவர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement