வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (15/04/2017)

கடைசி தொடர்பு:19:26 (15/04/2017)

சென்னையில் வருகிறது புத்தகக் காட்சி!

பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் மிகப்பெரிய புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. சென்னை பெரியார் திடலில் ஏப்ரல் 21 - 25 தேதிகளில் இக்கண்காட்சி நடைபெறுகிறது.

பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் புத்தக சங்கமம் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இவ்வருடம் பெரியார் திடலில் மிகப் பெரிய அளவில் புத்தக சங்கமம் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்கள் இக்கண்காட்சியில் தங்கள் புத்தகங்களை விற்பனைக்கு வைக்க உள்ளன. மேலும், அனைத்து புத்தகங்களுக்கும் 50 சதவீத தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில புத்தகங்கள், சிறுவர்கள் புத்தகங்கள், மாநில மொழிகளின் புத்தகங்கள் என பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஏப்ரல் 23, உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 5 நாள் கண்காட்சியாக நடைபெறும் இந்நிகழ்வு காலை 11 முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.