Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்’ நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்

சென்னை ஐ.சி.எப். (ரயில் பெட்டி தொழிற்சாலை) வளாகத்தில் உள்ள அம்பேத்கர் அரங்கில் 62–வது ரயில்வே வார விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு ஐ.சி.எப். பொதுமேலாளர் எஸ்.மணி தலைமை வகித்தார்.விழாவுக்கு சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்றார். அவர் பேசுகையில், ''மக்கள் பொதுவாக தங்கள் உரிமைகளை பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறார்கள். அந்த உரிமை பறிக்கப்பட்டால்தான் போராடுகிறார்கள். கடமைகளை நினைத்தும் உழைத்தால் தான் தேசம் முன்னேறும். இளைஞர் முன்னேற்றம் தான் நாட்டின் பலம். அதனுடன் ஒற்றுமையும் சேரும்போது நாட்டின் வளர்ச்சி இரட்டிப்பாகும்.  புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டது எனக்கு கிடைத்தது புது அனுபவம். அப்போதே எனது கடமை என்ன? என்பதை நான் உணர்ந்துவிட்டேன்'' என்று பேசினார்.
 

Kiran Bedi

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி கூறியதாவது, ''ஆளுநரின் (கிரண்பேடி) அதிகாரம் என்ன? முதலமைச்சரின் ( நாராயணசாமி) அதிகாரம் என்ன? என்பது அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது. எனது அதிகார வரம்புக்கு உட்பட்டே நான் செயல்படுகிறேன். நான் எதுக்கும், யாருக்காகவும் பயப்பட மாட்டேன். என் வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை  பார்த்துவிட்டேன். எனவே, எதற்கும் கலங்க மாட்டேன்.  ஆளுநர் பதவிக்கான வரம்புகளை மீறி நீங்கள் செயல்படுவதாக உங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளதே என்று கேட்கிறீர்கள். வரம்பு, அதிகார எல்லை, செயல்பாடு எல்லாவற்றையும் அரசியலமைப்பு ரீதியாக நான் பின்பற்றி வருகிறேன். எனவே, இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அப்படி கிடைக்கும் தீர்ப்பு நல்ல அரசியலுக்கு முன்னோட்டமாக அமையும்'' என்று சொன்னார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close