Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவாதி கொலை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இப்பவும் சிசிடிவி கேமரா இல்லை!

ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்தால் 'குய்யோ முறையோ' என்று கூச்சலிடுவதும், பின்னர் அதனை மறந்து போவதும் நமது வழக்கம். தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை சம்பவம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்தான் நடந்தது.

இந்த ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால், குற்றவாளியை கண்டுபிடிப்பதில் பல குளறுபடிகள். சுவாதியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரும் தற்கொலை செய்து கொண்டார். நீதிமன்றமும் வழக்கை முடித்து வைத்துவிட்டது. ஆனால், சுவாதி கொலை சம்பவம் நடந்து 10 மாதங்கள் ஆகியும் இன்னும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிசி கேமராக்கள் பொருத்தப்படாததுதான் வேதனையான விஷயம். 

சுவாதி கொலை சம்பவத்துக்கு பிறகு, ' நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என ரயில்வே நிர்வாகம் கூறியிருந்தது. அறிவித்தபடி, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. 

சென்னையில் சென்ட்ரல், எக்மோர், தாம்பரம் உள்ளிட்ட லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் 7 ரயில் நிலையங்களில்தான் சிசிடிசி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 'அதிக பெண் பயணிகள் வந்து செல்லும்  அனைத்து  புறநகர் ரயில் நிலையங்களில் உடனடியாக சிசிடிசி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை லயோலா கல்லூரி தத்தெடுத்து தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement