உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் இயக்குநர் கவுதமன்! | Director Gowthaman withdrew fasting protest!

வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (16/04/2017)

கடைசி தொடர்பு:09:50 (16/04/2017)

உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் இயக்குநர் கவுதமன்!

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட இயக்குநர் கவுதமன், உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார். 

Director gowthaman

 

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் இளைஞர்கள் கடந்த 13ம் தேதி காலை, சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் சாலையில் பூட்டு போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் கத்திப்பாரா மேம்பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட  கவுதமன் உள்ளிட்ட 7 பேரை பரங்கிமலை போலீசார் கைது செய்தனர்.
அனைவரும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  பின்னர் அன்று இரவே புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கவுதமன் மற்றும அவர் உடன் இருந்த ஆறு மாணவர்களும் சிறையில் இருந்தபடியே கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். சிறையில் அளிக்கும் உணவை சாப்பிட மறுத்தனர். உண்ணாவிரதத்தை கைவிடும்படி சிறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் கவுதமன் உள்ளிட்ட ஏழு பேரும் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக இன்று காலை அறிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க