வெளியிடப்பட்ட நேரம்: 10:12 (16/04/2017)

கடைசி தொடர்பு:12:54 (16/04/2017)

பாம்பனில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

பாம்பன் மற்றும் கடலூர் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமானுக்கு வடமேற்கே 330 கி.மீ. தொலைவில் மாருதா புயல் மையம் கொண்டுள்ளது.

pamban

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சியால் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் பாம்பன் மற்றும் கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இப்புயல் தமிழகத்துக்கு மழையை கொண்டு வந்து சேர்க்கும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

 

 

 

-உ.பாண்டி