வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (16/04/2017)

கடைசி தொடர்பு:11:18 (16/04/2017)

மதுரை, சிவகங்கையில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு தொடங்கியது!

 சிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. அந்தக் காளைகளை அடக்குவதற்கு 1000-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் உள்ளனர்.

jallikkattu


சிவகங்கை மாவட்ட ஜல்லிக்கட்டுக் குழுவினர் இந்தப் போட்டியை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளனர். வாடிவாசலில் அரண்மனை போல செட் அமைத்துள்ளனர். ஜல்லிக்கட்டின் போது துரதிருஷ்ட வசமாக வாடிவாசலில் இருந்து ஓடி வந்த காளை பார்வையாளர் ஒருவரை முட்டியது. அதில் ஆலங்குடியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேப் போல மதுரை மாவட்டம் ஏ.கிருஷ்ணாபுரத்தில் முனியாண்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 200 காளைகள் பங்கேற்கின்றன. 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளன. இரண்டு மாவட்டங்களிலும் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.