வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (16/04/2017)

கடைசி தொடர்பு:12:25 (16/04/2017)

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சீமான்!!

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதராவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தி வருகிறார்.

Seeman protest
 

டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 33 நாள்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் பிரச்னை குறித்து ஆலோசிக்க தி.மு.க இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்நிலையில் சீமான் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தி வருகிறார்.

seeman protest
 

போராட்டத்தின் போது பேசிய சீமான், “விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. மத்திய அரசு விவசாயிகளை அவமதித்துவிட்டது. விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க இன்று தி.மு.க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதால் புனிதமடைந்துவிடாது. தி.மு.கவின் திட்டங்களால்தான் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்: என்று கடுமையாக சாடி உள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க